புதன், 12 நவம்பர், 2025

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவ!!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த கொடுப்பனவு நாளைய தினம் (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) தெரிவித்துள்ளது. 


 அதற்கமைய 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை அஸ்வெசும கொடுப்பனவின் வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அண்மையில் தெரிவித்திருந்தது. 

2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

 எனினும் 2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதால் அவர்கள் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும் அந்த சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks