அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
கரந்தெனிய-எகொடவெல சந்தியில் சந்தேக நபர்களால் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னர் பெங்வல-எகொடவெல வழியாக பயணித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 
பின்னர் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக