புதன், 12 நவம்பர், 2025

அரிக்கீபா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்து- 37 பேர் பலி!!

பெருவின் அரிக்கீபா பகுதியில், பேருந்து ஒன்று லொரியுடன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த கோர விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்தனர். அதிகாலை வேளை பெருவையும் சிலியையும் இணைக்கும் பனமெரிகானா சூர் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்து, தென் அமெரிக்க நாடுகளில் சமீப ஆண்டுகளில் நடந்த மோசமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. 

லியாமோசாஸ் எனும் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து , 60 பயணிகளுடன், காரவேலி மாகாணத்தின் சலா நகரில் இருந்து அரிக்கீபா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது லொரியுடன் மோதி சுமார் 200 மீற்றர் ஆழமுள்ள பள்ளத்தில் வழு்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

 26 பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. . அதிவேகம், மோசமான வீதிகள் , சமிக்ஞைகள் இல்லாதமை மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு போன்ற காரணங்களால் பெருவில் அடிக்கடி வீதி விபத்துகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks