இந்த ஆணைக்குழுவுக்காக ஏற்கனவே ஏழு பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க பெண்களை வலுவூட்டல் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ள அதிகாரங்களுக்கமைய இந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மகளிர் ஆணைக்குழுவின் ஊடாக, அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைத்தளங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், தொல்லைகள் மற்றும் அநீதிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்.
அத்துடன், இதன்மூலம் பெண்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக