யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் துண்டு என்பவற்றை நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊழியர்கள் கண்டுள்ளனர்.
அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து , நிர்வாகத்தினர் கோப்பாய் காவற்துறையினருக்கு அறிவித்தனர்.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காவற்துறை விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன் இரண்டு மகசீன்களையும் வயர் துண்டையும் மீட்டனர்.
இரண்டு மகசீன்களுக்குள்ளும் 59 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும் , மீட்கப்பட்ட வயர் துண்டு 05 நீளமுடையது எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட மகசீன் மற்றும் துப்பாக்கி ரவைகள் குறித்து நீதிமன்றுக்கு அறிவித்து , மன்றில் அறிவுறுத்தலுக்கு ஏற்பட அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
அதேவேளை பல்கலைக்கழக வளாகத்தினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பதால் , பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறை தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக