கலாச்சாரம், பண்பாடு, கல்வி ஆகிய மூன்றிலும் பல தசாப்தங்களாக புகழ்பூத்து விளங்கிய யாழ்ப்பாணம் தற்போது குற்றச் செயல்கள், போதைப்பொருள் பாவனை, ஆட்கடத்தல் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளாகி கிடக்கும் அவல நிலையை அடைந்துள்ளது.
யாழில் ஒருபுறம் குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகரிக்க சிங்கள இராணுவமே காரணம் என விரல் நீட்டி பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால் அதையும் தாண்டி, பண ஆசை மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக்கல் போன்ற விடயங்களில் நம்மவர்கள் திசை திரும்ப சில தமிழர் தரப்புக்களும் உடந்தையாக இருப்பது வேதனைக்குரியதே.
இஷாராவுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஜே.கே பாய் எனப்படும் கெனடி பெஸ்டியனின் ஆட்கடத்தல் வலையமைப்பு தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக