அதன்படி, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான உயர்மட்ட ஆலோசகர்கள் குழு அடுத்த வாரம் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க உள்ளதுடன், இதன்போது இரு ஜனாதிபதிகளின் சந்திப்பின் திகதி குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
டிரம்ப் - புடின் சந்திப்பு ஹங்கேரியாவின் நகரமான புடாபெஸ்டில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி டிரம்ப் நாளை (17) வெஷிங்டன் டிசியில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்கவுள்ள பின்னணியில் இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக