வெள்ளி, 17 அக்டோபர், 2025

மட்டக்களப்பு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவன் கைது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை நேற்று (16) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 


மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றில் சம்பவ தினமான நேற்று அதிகாலை குறித்த சிறுமி அறையில் இருந்து காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடிய போது, வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை கைது செய்ததுடன், குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks