ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

கொள்கலன் விவகாரம் குறித்த அர்ச்சுனாவின் கருத்து உண்மை-நாமல் ராஜபக்ச

போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான பொருட்கள் கொள்கலன்களின் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் கொள்கலன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா (Archchuna) கூறிய விடயங்களும் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்துடன் போதைப்அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரசாங்கத்தினால் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கு மேலதிகமாக சில கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சினது செயலாளர் கூறுகிறார். குறித்த கொள்கலன்கள் எங்கு இருக்கின்றன என்பது குறித்து தாம் அறிந்திருப்பதாக துறைமுக அமைச்சர் முன்னதாக பொறுப்புடன் கூறினார். எனவே, இந்த கொள்கலன்களும் அவற்றில் ஒன்றா? என்று அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்.

பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.நுவரெலியாவில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறெனின் அந்த காணி யாருக்கு சொந்தமானது எனவும் ஆராயப்பட வேண்டும். பல்வேறு முதலீடுகளை கொண்டுவருவதாக கூறிய அரசாங்கம் இறுதியில் போதைப்பொருள் முதலீடுகளையே கொண்டுவந்துள்ளது. 

போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த காலங்களில் பல்வேறு கட்சிகளுடனும் செயற்பட்டுள்ளார்.இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பலர் கடந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கும் ஆதரவளித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் மொட்டுக் கட்சியினரை தொடர்புபடுத்தி பேசும் அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய இப்ராஹிம் தொடர்பில் எந்த வகையான நடவடிக்கையை எடுத்துள்ளது?பயங்கரவாதிகளின் பணத்தில் அரசியல் செய்யும் அரசாங்கம் தற்போது ஒரு உறுப்பினரின் பிரச்சினையை கொண்டு பொதுஜன பெரமுன மீது சேறுபூச முயல்கிறது. 

 ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறியிருந்தார். போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான பொருட்கள் இந்த கொள்கலன்களின் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் சில நேரம் அர்ச்சுனா கூறிய விடயங்களும் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.

 இந்த கொள்கலன்கள் குறித்த வெளிநாடுகளிலிருந்து எந்தவித புலனாய்வு அறிக்கைகளும் கிடைக்கவில்லையா அல்லது வந்த அறிக்கைகளை புறக்கணித்து அரசாங்கம் கொள்கலன்களை வெளியேற்றியதாக என்பதை காவல்துறை மா அதிபர் கூற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks