செவ்வாய், 9 செப்டம்பர், 2025

பிரான்ஸ் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!!

பிரான்சின் தேசிய சட்டமன்றம் 364 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை பதவியில் இருந்து நீக்கி அவரது சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த வாக்களித்தது. மேலும் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

 இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று எலிசே அரண்மனை தெரிவித்துள்ளது. 

 அரசாங்கத்தின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ள நாளைய தினம் பிரதமர் பிரான்சுவா பேய்ரூவை அந்த நாட்டு ஜனாதிபதி மெக்ரோன் சந்திப்பார் என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. எவ்வாறாயினும் பிரான்ஸ் ஜனாதிபதியும் உண்மையை புரிந்து கொண்டு பதவி விலக வேண்டும் என நம்பிக்கை வாக்கெடுப்பை தோல்வியடைய செய்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks