வியாழன், 28 ஆகஸ்ட், 2025

திருக்கோவில் தம்பிலுவில் மயானத்தில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி!!

கருணா-பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இன்று (28) மாலை அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

 அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் தெசீபா ரஜீபன் முன்னிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா-பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்டம், காரைதீவு பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், கைவிலங்கிடப்பட்டு குறித்த பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். 

இவர், திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி, படுகொலை செய்து, குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி, குற்றப்புலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks