சனி, 30 ஆகஸ்ட், 2025

ட்ரம்ப் பிறப்பித்த வரிகள் சட்டவிரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ், இந்த வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்கப் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

அவை சட்டத்திற்கு முரணானது என்பதால் செல்லாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. எனினும் இந்த தீர்ப்புக்கு ட்ரம்ப் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும் என்பதற்கு, அவகாசம் அளிக்கும் வகையில் இந்த தீர்ப்பு ஒக்டோபர் 14 வரை நடைமுறைக்கு வராது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks