புதன், 6 ஆகஸ்ட், 2025

இந்திய விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை!!

இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கான இந்திய உளவுத்துறை தகவல்களைக் கருத்தில் கொண்டு, இந்திய சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (BCAS) இந்த உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

 இந்த நடவடிக்கையின் கீழ், விமான நிலையங்கள், ஓடுபாதைகள், ஹெலிகொப்டர் தளங்கள், பறக்கும் பாடசாலைகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விமான நிறுவல்களிலும் மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks