அவரது இரண்டு பிள்ளைகளின் முன்னிலையில் மேற்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் சீருடைகளை ஒத்த ஆடைகளை அணிந்திருந்ததாக வீட்டார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில், மினுவங்கொட கொட்டுகொட பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர்.
இவர்கள் சென்ற தருணத்தில் அங்கு திலீப லக்மால் என்ற பஸ் திலீப, அவரது மனைவி, நண்பன் ஆகியோர் வீட்டுக்கு முன்னால் இருந்ததோடு மூன்று பிள்ளைகளும் வீட்டு முற்றத்தில் இருந்துள்ளனர்.
அந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பஸ் திலீபவை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். எனினும், அந்த முயற்சி தோல்வியடைந்ததால் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில், பஸ் திலீபவின் மூன்று பிள்ளைகளும் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்த பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சி அருகிலுள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், 2025 ஆம் ஆண்டில் இதுவரையில் 80 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு, இதில்44 பேர் மரணித்துள்ளனர். மேலும் 47 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக