குறிப்பாக, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் மிக் விமானக் கொள்முதல் (MiG deal) ஊழல் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கைகள் பெரும் அவர்களுக்கு சவால்களையும், சர்ச்சையை ஏற்படுத்தின.
தனது படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பு என்று மறைமுகமாக குறிப்பிட்டிருந்த லசந்தவுக்கான நீதி அநுர அரசாங்கத்தில் நிலைநாட்டப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
மகிந்த காலத்தில் தொடங்கி, நல்லாட்சி காலம், மற்றும் கோட்டபய ஆட்சியிலும் லசந்தவின் படுகொலை குறித்த விசாரணைகள் மந்தமாகவே நடைபெற்று வந்திருந்தன.
2015 இல், இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் (CID) முன்னாள் புலனாய்வாளர் நிஷாந்த சில்வா, இந்தப் படுகொலையில் கோட்டாபயவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும், 2025 ஜனவரியில், இலங்கையின் அட்டர்னி ஜெனரல் மூன்று சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.
இது பத்திரிகையாளர் அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த பின்னணியில் இலங்கையில் கோட்டாபய என்ற ஆட்சியாளர் தனது ஆட்சியில் செய்த கொடூரங்கள் தமிழர், சிங்களவர் என இனம், மதம் பாராது அரங்கேறிய வரலாறு இரத்தங்களால் பின்னிப்பிணைந்துள்ளது என இன்றும் அரசியல் ஆர்வளர்கள் விமர்சிக்கின்றனர்.
அதன் ஒரு அங்கமான லசந்த படுகொலையின் உண்மைகளை விரிவாக ஆராய்கிறது இன்றைய ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக