முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 07.08.2025 அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்தையன்கட்டு குளத்திலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி உள்நாட்டில் இல்லாத காரணத்தினால் யாழ் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த இளைஞனை தாக்கி கொலை செய்து சடலத்தை குளத்தில் இட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
குளத்திலிருந்து சடலத்தை மீட்ட போது உயிரிழந்த நபரின் முகம் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் கண்ணிலிருந்து இரத்தம் வந்திருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக