மனு மீது நான்கு வாரங்களில் முடிவெடுக்குமாறு தாம்பரம் தாசில்தாருக்கு ஆகஸ்ட் 25 அன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி, சுமார் 1.34 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார்.
சம்பந்த முதலியார் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த நிலத்தை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக போனி கபூர் தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரின் இரண்டாவது மனைவி, மகன், மகள் என மூன்று பேர் தங்களுக்கு சொத்தில் பங்கு உள்ளது எனக் கூறி வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடந்த வழக்கின் மனுவில் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.சம்பந்த முதலியாருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று சொத்து பிரிப்பு தொடர்பாக இவர்களுக்குள் பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் ஸ்ரீதேவி நிலத்தை வாங்கியதாக, வழக்கின் மனுவில் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
ஆனால், 'தங்களுக்கும் சொத்தில் பங்கு உள்ளது' எனக் கூறி 2005 ஆம் ஆண்டு தாம்பரம் தாசில்தாரிடம் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் சந்திரசேகரின் இரண்டாவது மனைவி தரப்பில் பெறப்பட்டுள்ளது.
'நிலத்தின் உரிமையாளரான சம்பந்த முதலியாரின் உறவினர்கள் மைலாப்பூரில் வசித்து வரும் சூழலில், வாரிசு சான்றிதழை தாம்பரம் தாசில்தார் வழங்குவதற்கு அதிகாரம் இல்லை' எனவும் வழக்கின்போது போனி கபூர் தரப்பு வாதிட்டது.
'1975 ஆம் ஆண்டு தன்னை சந்திரசேகர் திருமணம் செய்ததாக சிவகாமி என்பவர் கூறியுள்ளார். ஆனால், அவரின் முதல் மனைவி 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறந்துள்ளார். ஆகவே, இதை சட்டப்பூர்வ திருமணமாக கருத முடியாது' என, போனி கபூர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அந்தவகையில், இந்து வாரிசுரிமை சட்டத்தின்கீழ் மூன்று பேரையும் சட்டப்பூர்வ வாரிசுகளாக வகைப்படுத்த முடியாது' எனவும் போனி கபூர் தரப்பில் வாதிடப்பட்டது."ஸ்ரீதேவி குடும்பத்தினரின் வழக்கில் வாரிசு சான்றிதழை ரத்து செய்யும் அதிகாரம் தாசில்தாரிடம் உள்ளது. பட்டாவைக் கூட அவர் ரத்து செய்யலாம்" எனக் கூறுகிறார்,
சிவில் வழக்குகளைக் கையாளும் மூத்த வழக்கறிஞர் சத்திய சந்திரன்.
"நிலத்துக்கான பத்திரத்தில் இருந்து தான் உரிமை என்பது வருகிறது. பட்டாவுக்கும் பத்திரத்துக்கும் ஏதேனும் வித்தியாசம் கண்டறியப்பட்டால் பத்திரம் மட்டும் செல்லுபடியாகும்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக