கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பட்டுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தானது இன்று (12.08.25) அதிகாலை 03.30 மணியளவில் பட்டுஓயா பாலத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளதாக மின்னேரியா காவற்துறைனர் தெரிவித்துள்ளனர்.
மதுருஓயாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, எதிர்திசையில் வந்த டிப்பர் லொறியுடன் மோதுண்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொடை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் குறித்து மின்னேரியா காவற்துறைdர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக