வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

தம்புள்ளை விவசாயக் களஞ்சியசாலை மின் துண்டிப்பு!!

 நரேந்திர மோடியால் அண்மையில் தம்புள்ளையில் திறந்து வைக்கப்பட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் விவசாயக் களஞ்சியசாலைக்கான மின் துண்டிக்கப்பட்டுள்ளது. 


குறித்த களஞ்சியசாலையின் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, 8,409,000 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளமை இன்று (15) தெரியவந்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று, இன்று அந்த களஞ்சியசாலைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. அந்த மின் கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக குறித்த களஞ்சியசாலைக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமையை அந்த குழு வௌிப்படுத்தியது. 

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் முன்மொழிவுக்கு அமைய இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பல வருடங்களுக்கு முன்னர் இந்த களஞ்சியசாலை அமைக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் முன்னாள் எம்.பி.க்கள் குழு இன்று அங்கு விஜயம் செய்தது.

மின்சாரக் கட்டணத்தை செலுத்தாததால் வெப்பநிலை கட்டுப்பாட்டு விவசாய கிடங்கின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வெப்பநிலை கட்டுப்பாட்டு விவசாய கிடங்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் முன்மொழிவின் பேரில் கட்டப்பட்டது. 

 இதன்படி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் நிகழ்நிலை மூலம் திறந்து வைக்கப்பட்டது. 

அன்று முதல் இன்று வரையில் தம்புள்ளை வெப்பநிலை மற்றும் ஈரப்பதன் கட்டுப்பாட்டு விவசாய களஞ்சியசாலையின் சேவைகள் முன்னெடுக்கப்படாமை தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மம்பில, சஞ்சீவ எதிரிமன்ன, பிரேமநாத் சி. தொலவத்த, சுகீஸ்வர பண்டார, நிமல் பியதிஸ்ஸ உள்ளிட்ட சிலர் பேருந்து ஒன்றில் அங்கு சென்றிருந்தனர். 

 எனினும் அந்த களஞ்சியசாலையின் வாயில் மூடப்பட்டிருந்தது. இதனை அடுத்து அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு தொடர்பினை ஏற்படுத்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு களஞ்சியசாலைக்குள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks