வியாழன், 14 ஆகஸ்ட், 2025

பாதாள குழுக்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள் -ஐ.ஜி.பி.

பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவு வழங்கிய, அரசியல்வாதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். 37வது பொலிஸ்மா அதிபராக தமது கடமைகளை அவர் இன்று  பொறுப்பேற்றுக்கொண்டார். 

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பொலிஸ்மா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks