துருக்கியின் வட மேற்கு மாகாணமான பலிகெசிரில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சிந்திர்கி என்கிற நகர் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக இருக்கிறது என துருக்கி உள்துறை அமைச்சர் அலி எர்லிகயா தெரிவித்துள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக துருக்கி அதிபர் ரசீப் தய்யீப் எர்துவான் தெரிவித்துள்ளார். இதில் 81 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 29 பேர் காயமடைந்துள்ளனர். 16 கட்டடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன.
உள்ளூர் நேரப்படி இரவு 07:53 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன் அதிர்வுகள் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்நாட்டின் முக்கிய நகரான இஸ்தான்புல்லில் உணரப்பட்டுள்ளது.
"நமது நாட்டை அனைத்து வகையான பேரிடர்களிலிருந்தும் கடவுள் காப்பாற்றட்டும்" என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது வரை வேறு எந்த தீவிரமான பாதிப்பும் இல்லை என துருக்கி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக