வியாழன், 28 ஆகஸ்ட், 2025

இந்தோனேசியாவில் 5 பாதாள உலக குழு குற்றவாளிகள் கைது!!

இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது வரலாற்றில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முதல் முறையாகும் என்று காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னணி பாதாள உலக குழுவை சேர்ந்த ஐவரும் பெண் ஒருவரும் இந்தோனேசிய பாதுகாப்புப் பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கைது தொடர்பாக இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தற்போது சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு அறிவிப்பில் இருப்பதாகக் கூறினார்.

இலங்கை காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் சர்வதேச காவல்துறையினரின் ஆதரவுடன் இந்தோனேசிய காவல்துறையினரால் குறித்த குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். 

இதற்கிடையில், இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் அரசியல் ஈடுபடும் வரலாறு இருந்ததாகவும், இன்று அந்த சூழல் மாறிவிட்டது என்றும், குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருவதாகவும் காவல்துறைமா அதிபர் கூறினார்.

டுபாய், ஓமன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு ஆதரவளித்த இந்தோனேசிய தூதரகத்திற்கு விசேட நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். 

 இந்தோனிசியாவில் கைது செய்யப்பட்ட ஐந்து சிங்கள பாதாள உலகத் தலைவர்களுக்கும் சிறிலங்கா அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக சிறிலங்காவின் காவற்துறை அதிபர் தெரிவித்திருக்கிறார். இவ்வரசியல் பிரமுகர்களை அனுர அரசு அம்பலப்படுத்தவேண்டும். சிங்கப்பூரில் இருக்கும் பயங்கரவாத நிபணர் ரொஹான் குணரத்ன இதுபற்றி ஆராய மாட்டாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks