சனி, 16 ஆகஸ்ட், 2025

பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 320 பேர் பலி!!

வடக்கு பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி கடந்த 48 மணி நேரத்தில் குறைந்தது 321 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகளைக் கொண்ட கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 307 பேர் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் மேலும் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், வடக்கு கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் ஐந்து பேர் இறந்தனர் என்று அது தெரிவித்துள்ளது.

பெரும்பாலானோர் திடீர் வெள்ளத்திலும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் உயிரிழந்தனர், 21 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கில் அடுத்த சில மணிநேரங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், மக்களை "முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை" எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. 

பனேர், பஜௌர், ஸ்வாட், ஷாங்க்லா, மன்சேரா மற்றும் பட்டாகிராம் ஆகிய மலை மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதிகளாக மாகாண அரசு அறிவித்துள்ளது. 

இதனிடையே, இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டெடுப்பதிலும், பாதிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் சுமார் 2,000 மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று மாகாண மீட்பு நிறுவனம் AFP இடம் தெரிவித்துள்ளது. ஸ்வாட் பள்ளத்தாக்கின் முக்கிய நகரமான மிங்கோராவின் சுற்றுப்புறத்தில் வெள்ளம் சூழ்ந்த தெரு வழியாக ஒரு குடியிருப்பாளர் பயணிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks