சனி, 12 ஜூலை, 2025

மாத்தறை பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இறந்த பெண் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, 

மேலும் அவர் கருப்பு, மஞ்சள் நிற உடை மற்றும் கருப்பு குட்டைப் பாவாடை அணிந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மரணித்தவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

பாகிஸ்தானில் துப்பாக்கிதாரிகள்12 பேருந்து பயணிகள் கொலை!!

பாகிஸ்தானின் பதற்றமான தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்ற பேருந்து பயணிகளில் 12 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிக...