திங்கள், 7 ஜூலை, 2025

அமெரிக்காவின் டெக்சாஸ் வெள்ளத்தில் 82 பேர் பலி!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 28 குழந்தைகள் உள்ளிட்ட 82 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளப்பெருக்கால் காணாமல் போன 10 சிறார்கள் உட்பட சுமார் 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் தென்மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

குறிப்பாக கடந்த வியாழக்கிழமை இரவு முதல் வௌ்ளிக்கிழமை அதிகாலை வரை 11 அங்குல கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் டெக்சாஸ் மாகாணத்தின் பல பகுதிகளில் வௌ்ள நீரில் மூழ்கின. மலைப்பகுதியில் உள்ள கெர்கவுன்டியில் பெய்த தொடர் கனமழையால் குவாடலூப் ஆற்றின் நீரின் அளவு 45 நிமிடங்களில் 26 அடி உயர்ந்தது. இதனால் ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் நீரில் மூழ்கின. 

வௌ்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதில் 28 குழந்தைகள் உள்ளிட்ட 82 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளப்பெருக்கால் காணாமல் போன 10 சிறுவர்கள் உட்பட சுமார் 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காணாமல் போனவரை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. 

இதுகுறித்து டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரெக் அபோட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த மழை, வௌ்ளம் குறித்து வானிலை ஆய்வு மையம் வௌ்ளிக்கிழமை அதிகாலையிலேயே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் இந்தளவுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை. 

இதனால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு அசாதாரண பேரழிவு. வௌ்ளத்தில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஆயினும் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் பணி தொடரும்” என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

செங்கடலில் ஏமன் அருகே ஏவுகணை கப்பல் தீப்பிடித்து எரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை  ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளை வீசி தாக்கிய பின்னர், செங்கடல் வழியாக பயணித்த ஒரு கப்பல் தீப்பிடித்து எரிந்ததா...