நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக ஷேக் ஹசீனா மீது குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்து.இந்த நிலையில், நீதிபதி எம்.டி. கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 இன் மூன்று பேர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியதாக குறிப்பிடப்படுகின்றது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.இதன் பிறகு, எந்தவொரு வழக்கிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவது இதுவே முதல் முறை என குறிப்பிடப்படுகின்றது.
இதனிடையே, வங்கதேச அரசு ஹசினாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த கோரிக்கை விடுத்துள்ளதுடன் மேலும் அவரது மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக