புதன், 9 ஜூலை, 2025

யாழ் செம்மணி - சித்துப்பாத்தி இதுரை 56 மனித எலும்புக்கூடுகள்!!

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 50 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 13 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாவது அடையாளப்படுத்தப்பட்ட இடத்திலே மூன்று மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


அவை இன்றைய தினம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, நாளை (09) குறித்த மூன்று எலும்புக்கூடுகளும் மீட்டெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

பாகிஸ்தானில் துப்பாக்கிதாரிகள்12 பேருந்து பயணிகள் கொலை!!

பாகிஸ்தானின் பதற்றமான தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்ற பேருந்து பயணிகளில் 12 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிக...