சனி, 5 ஜூலை, 2025

இந்தியா மீது அமெரிக்கா 500% வரி!!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விவாதம் நீடிக்கிறது. குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். 

இது நமது நலன்களை பாதிக்கக் கூடும் என்றும் செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தற்போது தெரிவித்துள்ளார். 

 அமெரிக்க செய்திச் சேனல் ஏபிசி நியூஸிடம் பேசிய செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம், "எந்த நாடாவது ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு, அதே நேரம் யுக்ரேனுக்கு உதவி செய்யாமல் இருந்தால், அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 500% வரி விதிக்க வேண்டும், 

இந்தியாவும், சீனாவும் புதினின் 70 விழுக்காடு எண்ணெயை வாங்குகின்றன, அதுவே அவர் தொடர்ந்து போர் புரிய உதவுகிறது. எனது மசோதாவுக்கு இதுவரை 84 எம்.பி.களின் ஆதரவு கிடைத்துள்ளது, எனக் கூறினார். "இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் புதினின் யுத்த கொள்கையை ஆதரிப்பதை நிறுத்தி, அவர் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை உறுதி செய்யும் வகையில் இந்த நாடுகள் மீது வரி விதிக்க தேவையான அதிகாரத்தை இந்த மசோதா அதிபருக்கு வழங்கும்," என்றும் லிண்ட்ஸே கிரஹாம் கூறினார்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்தன. 

இந்த தடைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. இந்தியா ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என மேற்குலக நாடுகள் விரும்பின, ஆனால் போரின் போது ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் புதிய உச்சத்திற்கு சென்றது. ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் முதன்மையான மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. 

போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யில் ரஷ்யாவின் பங்கு இரண்டு விழுக்காடுக்கு கீழ் இருந்தது,

இப்போது கிட்டத்தட்ட 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ரஷ்ய தடைகள் சட்ட மசோதா 2025 (The Russia Sanctions Act, 2025) அமல்படுத்தப்பட்டால், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் அல்லது யுரேனியம் வாங்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 விழுக்காடு வரி விதிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

செங்கடலில் ஏமன் அருகே ஏவுகணை கப்பல் தீப்பிடித்து எரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை  ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளை வீசி தாக்கிய பின்னர், செங்கடல் வழியாக பயணித்த ஒரு கப்பல் தீப்பிடித்து எரிந்ததா...