திங்கள், 7 ஜூலை, 2025

யாழ் செம்மணி 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!!

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இதில் இதுவரை 44 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழிக்கு அருகில், உள்ள பகுதிகளில் மேல் தெரியும் வகையிலும் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

 செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , மனித புதைகுழிகளுக்குள் வெள்ள நீர் புகாத வகையில் மண் மேடு அமைக்கும் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுப்பட்டது. 

அதன் போது, புதைகுழிக்கு அருகில் உள்ள பகுதியை துப்பரவு செய்து மண் அகழ்ந்து புதைகுழிக்கு அருகில் மண் மேடு அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வேளை அப்பகுதிகளில் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , மண் அகலும் பணிகள் நிறுத்தப்பட்டு , அவ்விடத்தில் புதைகுழி அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 11ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

செங்கடலில் ஏமன் அருகே ஏவுகணை கப்பல் தீப்பிடித்து எரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை  ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளை வீசி தாக்கிய பின்னர், செங்கடல் வழியாக பயணித்த ஒரு கப்பல் தீப்பிடித்து எரிந்ததா...