மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரையும் இன்று வியாழக்கிழமை (06/03/2025) நீதிக்கான நடை பயணத்தின் 1030 வது நாள் போராட்டத்தில் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர்கள் பௌத்த தேரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
காலிமுகத்திடல் அரகலய போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் நீதிக்கான பயணம் தொடர்ந்து 1030 வது நாளாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் வடக்கு கிழக்கில் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி அவர்களுக்கான இடங்கள் அன்று முதல் இன்றுவரை கிடைக்கப்படவில்லை அனைத்து மக்களையும் விட அதிகமாக வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.
எனவே, அந்த மக்களின் நோக்கத்தைக் கூட தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது.
எனவே, அந்த மக்களின் நோக்கத்துக்காக மக்கள் பேரவைக்கான இயக்கமாகிய நாங்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து பேராடிவருகின்றோம் அதை வலியுறுத்துவதற்காக இந்தத் தொடர்ச்சியான நடைபாதைப் போராட்டங்கள், கோரிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த அசாதாரண, நியாயமில்லாத இந்த முறையை மாற்றுவதற்காக, உண்மையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக மக்களாகிய நாங்கள் ஒன்றுபடவேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக