திங்கள், 10 மார்ச், 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய மாணவி கைது.

கனேடிய மாணவி ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கனேடிய இளங்கலை கற்கை நெறி கற்கும் 20 வயதுடைய மாணவி என்பதோடு, இவர் இலங்கைக்கு செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அவர் கனடாவின் டொராண்டோவிலிருந்து குறித்த போதைப்பொருளுடன் அபுதாபி சென்று அங்கிருந்து, இரவு 8.35 மணிக்கு எதிஹாட் எயார்வேஸ் விமானம் EY-396 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளாா். 

அவர் கொண்டு சென்ற  பொதியில் 3 போர்வைகளில் சுற்றி மறைத்து வைத்திருந்த குறித்த போதைப்பொருளுடன் அவா் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

குறித்த பெண்ணும் அவர் கொண்டு சென்ற போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

பிரித்தானியா எண்ணெய் டேங்கர் மற்றும் சரக்குக் கப்பல் மோதியதில் பெரும் தீ விபத்து, 32 பேர் காயம்!!

ஒரு எண்ணெய் டேங்கர் மற்றும் ஒரு சரக்குக் கப்பலின் குழுவினர் "பாதுகாப்பாகவும், பாதுகாப்பாகவும்" உள்ளனர், வடக்கு கடலில் கப்பல்கள் மோ...