இதனடிப்படையில், நெல்லியடிப் காவல்துறையினரை எதிர்வரும் நான்காம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நெல்லியடி பகுதியில் சிறிலங்கா ரெலிக்கொமிற்கு சொந்தமான கேபிள் வயர்கள் அறுக்கட்டமை தொடர்பில் மந்துவில் பகுதியில் வசிக்கும் இளைஞர் நெல்லியடி காவல்துறையினரால் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞன், காவல்துறையினர் தன்னை தாக்கி கையை முறித்தார்கள் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததோடு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்தார்.
இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு நெல்லியடிப் காவல்துறையினருக்கும் குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சகருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் அழைப்புக் கட்டளை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக