திங்கள், 10 பிப்ரவரி, 2025

மாத்தளை சிறுவர் தினத்தன்று சிறுவன் கொலை தொடர்பில் நேற்று ஆர்ப்பாட்டம்.

சிறுவர் தினத்தன்று சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மாத்தளை மேல் நீதிமன்றத்தால் பிணைவழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 08 சந்தேக நபர்களின் பிணையை ரத்து செய்து சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என மாத்தளை மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள மாத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட மகாவில்ல நாலந்த தோட்டம் மடவல்ல உல்பத்த பிரதேச மக்கள் நேற்று (09) கவனயீர்ப்புப் பேராட்டம் ஒன்றை நடத்தினர் .

இதன்போது பிரதேச மக்கள் சந்தேக நபர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சுலோகங்களையும் ஏந்தி ஊர்வலமாக சென்று தமது கவன ஈர்ப்பினை முன்னெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலு‌ம் தெரிய வருவதாவது, கடந்த வருடம் இடம்பெற்ற சிறுவர் தினத்தன்று மோகன் யூகேஸ் என்ற (வயது 17) வயதுடைய பாடசாலை மாணவன் தனது நன்பனின் காதலியை பார்க்க அவரின் வீட்டுக்கு சொன்ற போது காதலியின் உறவினர்களால் குறித்த மாணவன் தடியாலும், தலை கவசத்தாலும் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான (08) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 08 பேரும் கடந்த ஜனவரி மாதம் 28 திகதி மாத்தளை மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். 

இவ்வாறு விடுதலையான இச் சந்தேக நபர்கள் சாட்சியங்களை அச்சுறுத்தியதால் பாதுகாப்பு கோரி மீண்டும் அவர்களை கைது செய்யுமாறு பாடசாலை மாணவர்கள் பிரதேச மக்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சந்தேக நபர்களின் பிணையை ரத்து செய்து அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட வேண்டும் என இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நீதிக்கு புறம்பான கொலைகள் குறித்து BASL கவலை தெரிவித்துள்ளது.

சட்ட அமலாக்க அதிகாரிகளின் காவலிலும் நீதிமன்ற அறைக்குள்ளும் சந்தேக நபர்கள் கொல்லப்படுவது தொடர்பான சமீபத்திய சம்பவங்கள் குறித்து இலங்கை வழக்கற...