ஞாயிறு, 26 ஜனவரி, 2025

சட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அழுத்தங்களை பிரயோகிக்காது-அநுர குமார

மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக தனிநபர்களைக் கைது செய்வதிலும் சட்டத்தை அமுல்படுத்துவதிலும் பொலிஸ் உள்ளிட்ட சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு அரசாங்கம் எந்தவொரு அழுத்தங்களையும் பிரயோகிக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


ஹோமாகம, பிடிபன பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, சில சட்ட ரீதியான அதிகாரிகள் தங்களுக்கு அழுத்தங்களை வழங்காத அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை வழக்குகளை மறைத்து வருவதாகவும் குறிப்பிட்டார். 

 அத்தகைய அதிகாரிகள் தங்கள் கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இதேவேளை, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து குறுகிய காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எதிர்க்கட்சி குழுக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

 அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கான அடிப்படைக் கொள்கை கட்டமைப்பு தற்போது தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தமிழ் மொழித் தியாகிகள் நினைவுநாள் – வரலாறு

1938 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர். பல்லாயிரம் ...