இந்நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் காவல்துறையினா் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் மனுத்தாக்கல் செய்தனர். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற உள்ளது.
புதன், 29 ஜனவரி, 2025
அருச்சுனாவிற்கு யாழ் நீதிமன்றத்தில் அழைப்பு.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் காவல்துறையினா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு செல்ல உள்ளார்.
ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிவப்பு வணக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுன அரசியலில் இருந்து விலகுவாரா?
ஜாமீன் பெற்ற யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாத ன் அர்ச்சுண, சட்டத்தை மதிக்கிறேன் என்றும், அரசியல் களத்தில் அதிருப்தியை ...
-
விளம்பரதாரர் சைமன் ஜோன்ஸ், வார இறுதியில் இறந்த கலைஞர், "நம்பமுடியாத அளவிற்கு நேசிக்கப்பட்ட, அன்பான இதயம் மற்றும் அற்புதமான நபர்"...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக