இதுதொடர்பாக வழக்கறிஞர் அஜித்குமார் காவல்துறை இயக்குநர், (DGP) மற்றும் மதுரை மாநகர் காவல் ஆணையர், ஆகியோருக்கு ஆன்லைன் மற்றும் பதிவு தபால் மூலம் அனுப்பியுள்ள புகார் மனுவில், இன்று தமிழ்நாடு முழுவதும் பரபரப்பைகிளம்பி இருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழ் இனத்தின் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் எடிட்டிங் செய்யப்பட்டது என சினிமா இயக்குனர் திரு. சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக திரு. பிரபாகரன் அவர்களின் பெயரை கூறி கட்சி நடத்தி வரும் சீமான், பல இலட்சம் இளைஞர்களின் தமிழ் உணர்வை தூண்டி தவறான பாதையில் அழைத்துச் சென்றுகொண்டு இருக்கிறார். பிரபாகரன் அவர்களின் நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளார்.
ஆக பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு கோடி கணக்கான தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த புகைப்பட மோசடி மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி பல கோடிகளை திரள் நிதி மூலம் திரட்டி அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார். ஆகவே சமூகம் அவர்கள் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்களையும், இலங்கைத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஏமாற்றி பல கோடி ரூபாய் திரளநிதி பெற்று பிழைப்பு நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சைமன் என்கின்ற சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்தும் அந்த போலியான புகைப்படத்தை உருவாக்கி கொடுத்த இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் மற்றும் செங்கோட்டையன் என்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக