வியாழக்கிழமை (09) விடுக்கப்பட்ட அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் அதிலிருந்து தப்பியிருக்கிறார். பின்னர் அவர் நெஞ்சு, கழுத்து, முதுகில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார்.
அவர் காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி டிசெம்பர் 27ஆம் திகதி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 30 ஆம் திகதி நீதிமன்றில்சந்தேக நபர்கள் தமிழ்ச்செல்வனால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் அவர்கள் பிணையில் விடுவித்துள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரசிங்கவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் உடனடியாக பதில் கூற முடியாது என தெரிவித்துவிட்டார்.
உள்ளூர் நாளிதழ்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதி வருவதன் காரணமாக தான் தாக்கபட்டிருக்கலாம் என எம்மிடம் தமிழ்ச்செல்வன் சந்தேகம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு தண்டனைகள் கிடைக்காமை தொடர்பில் CPJ ஆவணப்படுத்தி இருக்கிறது.
1983 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் உள்நாட்டு போர் காரணமாக கொல்லப்பட்ட அதிகளவானபத்திரிகையாளர் தமிழ் பத்திரிகையாளர்கள்.
எனவே, புதிதாக பொறுப்பேற்ற அரசு தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், துன்புறுத்தல்கள் மற்றும் தண்டனை விலக்களிப்பு என்பவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் திட்ட இயக்குநர் கோரியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக