புதன், 15 ஜனவரி, 2025

களுத்துறை - தொடங்கொடை மற்றொரு துப்பாக்கிச் சூடு.

களுத்துறை - தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. களுத்துறை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர். தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு!!

கிளிநொச்சியின் மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் இரணைமடு குளத்துக்கு வந்து கொண்டிருக்கிறம...