அதன்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது.
சுமார் 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம் ரூ.102 கோடியிலும், 10,000 பேர்கள் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் ரூ.172 கோடியிலும் கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ரூ.106 கோடியிலும் அமைய உள்ளது.
மேலும் இந்த பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், சுமார் 10,000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் உள்ளிட்டவற்றுக்கான பணிகள் ரூ.105 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026ம் ஆண்டு தொடக்கத்திற்குள்ளாக இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு டெண்டர் கோரியது. இந்நிலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கோரி கடந்த டிசம்பர் 31ம் தேதி பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது. ஆனால் இன்னும் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கவில்லை. இந்த அனுமதி கிடைத்தவுடன் ஈசிஆர் சாலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கான கட்டுமானத்திற்கு தேவையான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக