திங்கள், 6 ஜனவரி, 2025

பதுளை 16 வயதான பாடசாலை மாணவி மாயம்!

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதுளை எட்டம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 3ஆம் திகதி முதல் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சிறுமியின் தாயார் இது தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதுடன், காணாமல் போன சிறுமி சுமார் 5 அடி 2 அங்குல உயரமும் சாதாரண உடலமைப்பும் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறுதியாக வெளிர் பச்சை நிற, நீளமான சட்டை அணிந்திருந்ததாகவும், அவரது இடது கையின் முழங்கைக்கு அருகில் சிறிய வெட்டு காயம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும். பொறுப்பதிகாரி - எட்டம்பிட்டிய - 0718591528 எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையம் - 0552295466

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு!!

கிளிநொச்சியின் மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் இரணைமடு குளத்துக்கு வந்து கொண்டிருக்கிறம...