பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் போது, கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், சம்பவம் தொடர்பில் 03 சந்தேகநபர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து மூன்று கோடியே 55 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்படி, நேற்று (27) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட பணம் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கடந்த 23ஆம் திகதி டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னர் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் தமக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.
எனினும் தரிந்து பெரேரா என்ற சந்தேகநபர் பணப் பையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக