திங்கள், 18 நவம்பர், 2024

ஒற்றையாட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர்- சிவாஜிலிங்கம்!

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80,000 வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், டக்ளஸ் மற்றும் அங்கஜன் போன்றோரின் வாக்குகளே NPP இற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். 

தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம். தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள். 

 தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நார்தாம்ப்டன் கார் பூட்டில் மனைவியின் உடல்- நாட்டிற்கு தப்பிச் சென்ற கணவர்!!

வீட்டிலிருந்து 100 மைல் தொலைவில் கார் பூட்டில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவரைத் தேடும் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்ப...