பாகிஸ்தான் முழுவதும் இருந்து இஸ்லாமாபாத்தில் பல ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்பதால் மாலையில் நிலைமை இன்னும் கடினமாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த போராட்டத்தை தடுக்கும் முயற்சியில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. சில பகுதிகளில் தொலைபேசி சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இம்ரான் கான் தனது ஆதரவாளர்களுக்கு போராட அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இந்த போராட்டம் தொடங்கியது. அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வரை இஸ்லாமாபாத்தில் தொடர்ந்து இருக்குமாறு, தனது ஆதரவாளர்களுக்கு விடுத்த செய்தியில் இம்ரான் கான் கூறியிருந்தார்.
திங்கள், 25 நவம்பர், 2024
பாகிஸ்தான் தலைநகரை நோக்கி இம்ரான் ஆதரவாளர்கள்!!
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அந்த நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக செல்கின்றனர். இதனால், அங்கே உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.இஸ்லாமாபாத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில், அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், பதிலடியாக காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிவப்பு வணக்கம்
மேற்கு லண்டன் துப்பாக்கிச் சூட்டில் 8 வயது சிறுமி படுகாயமடைந்தார்!!
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்குப் பிறகு லாட்ப்ரோக் தோப்பில் சுடப்பட்ட 8 வயது குழந்தையும் 34 வயதான ஆணும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக