புயலாக வலுப்பெற்று அடுத்த 2 நாட்களில் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கில் 800 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு தெற்கு – தென்கிழக்கில் 710 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்கிறது. தமிழ்நாட்டை நோக்கி புயல் நகர வாய்ப்புள்ளதால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 4 மாவட்டங்களுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. சாந்தோம், மந்தைவெளி, எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், நெசப்பாக்கம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், கோடம்பாக்கம், அசோக் நகர், மேற்குமாம்பலம், சென்னை புறநகர் பகுதிகளான வண்டலூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர், பூவிருந்தவல்லி, மதுரவாயல், போரூர், மாங்காடு, குன்றத்தூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது .
செங்கல்பட்டு: பரனூர், மகேந்திரா சிட்டி, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூரில் கனமழை
புதுக்கோட்டை: அறந்தாங்கி, மணமேல்குடி, சுப்பிரமணியபுரம், கட்டுமாவடி உள்ளிட்டு சுற்று வட்டாரங்களில் மழை
திருச்சி:உறையூர், தென்னூர், புத்தூர், கண்டோன்மெண்ட், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மழை
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர், சந்தைபேட்டை, கீரனூர், ஆவியூர், அரக்கண்டநல்லூர், மனம்பூண்டி, தேவனூரில் மழை
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை, பென்னலூர்பேட்டை, பூண்டி, தாமரைப்பாக்கம், செவ்வாப்பேட்டை, பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், பெரியபாளையம், தச்சூர், புழல் உள்ளிட்ட இடங்களில் மழை
மயிலாடுதுறை: சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் மழை
வந்தவாசி: பாதிரி, வெண்குன்றம், மும்முனி, பிருதூர், மங்கநல்லூர்
உள்ளிட்ட இடங்களில் மழை
காஞ்சிபுரம்: வெள்ளைகேட், நத்தப்பேட்டை, களக்காட்டூர், -வாலாஜாபாத், தாமல், பாலுசெட்டி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் பழை பெய்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக