திங்கள், 14 அக்டோபர், 2024

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை!!

வரி ஏய்ப்பு தொடர்பில் டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. 


 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வெட் வரியை செலுத்தாமைக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. 

 உரிய வரியை செலுத்துமாறு கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு இன்று  கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது. அப்போது உரிய தொகையை செலுத்தாததால், பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் இந்தத் தண்டனை விதித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தமிழ்மக்களுக்கு அதிகாரப்பகிர்வு தேவை இல்லை - ஜேவிபி ரில்வின் சில்வா

வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் (Janatha Vimukthi Peramuna) பொதுச...