செவ்வாய், 10 செப்டம்பர், 2024

ஜேர்மனியில் மியூனிக் நகரில் காணாமல் போயுள்ள இலங்கை மாணவன்!!

ஜேர்மனியின் மியூனிக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவன் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகக் கொண்ட லசித் யசோதா க்ரூஸ் புள்ளே என்ற இந்த மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த மாணவன் மற்றும் சிம்பாப்வேயைச் சேர்ந்த மாணவன் ஆகியோருடன் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற போதே இவர் காணாமல் போனதாகக் கூறப்படுகின்றது. 

தனது இளைய சகோதரர் காணாமல் போனமை மர்மமானது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அது தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு கோரி வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் மாணவனின் சகோதரியான திருமதி சாமோடி மிலேஷானி என்பவா் தெரிவித்துள்ளார். 

சில குழுக்கள் தனது சகோதரரை ரகசியமாக மறைத்து வைத்திருப்பதாக வலுவான சந்தேகம் இருப்பதாகவும் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, ​​வெளிநாடு செல்வதற்கு பணம் தேடுவதற்காக அடமானம் வைத்த தங்கப் நகைகளை மீட்பதற்காக ஐந்தரை லட்சம் ரூபாய் அனுப்புவதாகவும், 12ஆம் திகதி அந்த பணம் தமக்கு கிடைக்கும் என சகோதரரை கூறியதாகவும் மிலேஷானி குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிட்டிஷ் ஸ்டார்மர் தொழிலாளர் மாநாட்டு உரையை ஆற்றுகிறார்.

டெய்லி டெலிகிராப், பிபிசியின் முன்னணி தேர்தல் நிபுணரும், நாட்டிலேயே மிகவும் மதிக்கப்படும் பிசிபாலாஜிஸ்ட்களில் ஒருவருமான பேராசிரியர் சர் ஜான்...