ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல்!!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க முந்துகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அநுர குமார திஸாநாயக்க முன்னணியில் இருக்கிறார்.
தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அநுர குமார திஸாநாயக்க தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை தாண்டவில்லை.வாக்கு எண்ணிக்கை நிலவரம் அநுர குமார திஸாநாயக்க - 27,07,105 (39.52%) சஜித் பிரேமதாச - 23,48,050 (34.28%) ரணில் விக்ரமசிங்க - 11,92,649 (17.41) இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, ஒட்டுமொத்தமான பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். 

தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த அநுர குமார திஸாநாயக்கவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. அதேநேரத்தில், சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் தொடர்கிறார். 

ஒருவேளை, யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிட்டால், மக்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தீர்மானிக்கப்படும். நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு வாக்குப்பதிவு நாளான நேற்று (செப்டம்பர் 21) இரவு 10 மணி முதல் இன்று (செப்டம்பர் 22) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக போலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது. 

பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

நாட்டில் தற்போது அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் நேரத்தில் வீட்டிலேயே நேரத்தைச் செலவிடுமாறு போலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை காலையிலும் தொடர்ந்த நிலையில் இலங்கை முழுவதும் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது.

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை மருத்துவமனை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று...