திங்கள், 9 செப்டம்பர், 2024

கடவுச்சீட்டு தொடர்பில் ஆராய போலந்து சென்ற அதிகாரிகள் குழு!!

வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று போலந்து சென்றுள்ளது. இலத்திரனியல் கடவுச்சீட்டு (E-Passport) விலைமனு கோரல் காரணமாக, கடவுச்சீட்டு வழங்குவதில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குள் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது திணைக்களத்தின் முன்பாக நீண்ட வரிசை காணப்படுகிறது. இந்நிலையில் இணையவழி ஊடாக கடவுச்சீட்டுக்காக முன்பதிவு செய்யும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் தொகையொன்று ஒக்டோபர் 25ஆம் திகதி கிடைக்கும் என திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மேற்படி தினத்தில் சுமார் 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் பெறப்பட உள்ளதோடு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு மேலும் 100,000 வெற்று கடவுச்சீட்டுகள் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய வெற்று கடவுச்சீட்டுகள் கருப்பு முகப்பைக் கொண்டுள்ளதோடு அவை போலந்தில் தயாரிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி, இந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் உற்பத்தி செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழு போலந்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிட்டிஷ் ஸ்டார்மர் தொழிலாளர் மாநாட்டு உரையை ஆற்றுகிறார்.

டெய்லி டெலிகிராப், பிபிசியின் முன்னணி தேர்தல் நிபுணரும், நாட்டிலேயே மிகவும் மதிக்கப்படும் பிசிபாலாஜிஸ்ட்களில் ஒருவருமான பேராசிரியர் சர் ஜான்...