செவ்வாய், 10 செப்டம்பர், 2024

நிலவில் அணு மின் நிலையம்: ரஷ்யா, சீனா உடன் இணையும் இந்தியா.

பீஜிங், நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா, சீனா உடன் இணைந்து இந்தியா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலா குறித்த ஆராய்ச்சியில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக சந்திரயான் விண்கலத்தை, நிலவின் தென் பகுதியில் தரையிறக்கி இந்தியா சாதனை படைத்து உள்ளது. அதேபோல் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளும் நிலா குறித்த ஆராய்ச்சியில் மும்முரம் காட்டி வருகின்றன. 

அங்கு நிரந்தரமாக ஆய்வுக்கூடத்தை அமைக்க முயற்சி செய்கின்றன. இதற்காக சீனா உடன் ரஷ்யா கைகோர்த்து உள்ளது. இரு நாடுகளின் திட்டப்படி 2035 - முதல் 2045க்குள் படிப்படியாக இந்த ஆய்வு மையத்தை உருவாக்கிவிட இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்த மையத்திற்கு மின்சாரம் வழங்க ஏதுவாக நிலவில் அணுமின் நிலையம் ஒன்றை உருவாக்க ரஷ்யா முயற்சி செய்து வருகிறது.

2040க்குள் இந்த அணுமின் நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா, மிகவும் சிக்கலான இந்த திட்டத்தில் மனிதர்கள் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது. ரஷ்யாவின் முயற்சியில் இணைய சீனா ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்தியாவும் இணைய விரும்புவதாக ரோசாட்டம் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் லிகாசேவ் கூறியதாவது: நிலவில் பல்வேறு சர்வதேச திட்டங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகிறோம். 

அந்த வகையில்,அணுமின் நிலையம் அமைப்பதில், சர்வதேச அமைப்புகளின் பங்களிப்புடன், இந்தியாவும், சீனாவும் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார். இந்த அணுமின் நிலையம் 2036ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நிபுணர்கள் சிலர் கூறுகையில், தூதரக ரீதியில் இந்தியா கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்புவதற்காக சுபான்ஷூ சுக்லாவை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதுடன், தற்போது நிலா குறித்த திட்டத்திற்காக ரஷ்யா, சீனா உடன் இணைந்து செயலாற்றி வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிட்டிஷ் ஸ்டார்மர் தொழிலாளர் மாநாட்டு உரையை ஆற்றுகிறார்.

டெய்லி டெலிகிராப், பிபிசியின் முன்னணி தேர்தல் நிபுணரும், நாட்டிலேயே மிகவும் மதிக்கப்படும் பிசிபாலாஜிஸ்ட்களில் ஒருவருமான பேராசிரியர் சர் ஜான்...