திங்கள், 23 செப்டம்பர், 2024

இலங்கையின் ஜனாதிபதியாக Jvp அநுர குமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம்!!!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவருடைய கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ஒரு இடதுசாரி கட்சியாக அறியப்பட்டதால், அவர் இந்தியாவைவிட சீனாவுடன் கூடுதல் நெருக்கம் காட்டுவாரா?

இலங்கையின் முதல் இடதுசாரி ஜனாதிபதி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் (Jathika Jana Balawegaya) வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். ஜனதா விமுக்தி பெரமுனவைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்படுவார் என பத்தாண்டுகளுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், அதை ஒருவர்கூட நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் அரசியல் அதிசயங்களுக்கு பெயர் போன இலங்கையில் இப்படி நடப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. தேசிய மக்கள் சக்திக்கு தலைமையேற்றுள்ள ஜனதா விமுக்தி பெரமுன கட்சித் தலைவரான அநுர குமார திஸாநாயக்க, இரண்டாவது இடம் பிடித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைவிட, சுமார் 12 லட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார். 

38 பேர் களத்தில் நின்ற இந்தத் தேர்தலில், புதிய ஜனாதிபதியைத் தேர்வுசெய்ய விருப்ப வாக்குகளையும் எண்ணவேண்டி வந்தது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை வந்த பிறகு, விருப்ப வாக்குகள் எண்ணப்படுவது இதுவே முதல் முறை. அதேபோல, இலங்கையின் வரலாற்றில் ஒரு இடதுசாரி தலைவர் ஜனாதிபதியாக பதவியேற்பதும் இதுவே முதல் முறை.

இந்த நிலையில், இலங்கைக்கு அருகில் உள்ள பிராந்திய சக்திகளான இந்தியாவையும் சீனாவையும் புதிய ஜனாதிபதி எப்படி அணுகுவார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.இடதுசாரி சாய்வு கொண்டவர் என்பதால், இயல்பாகவே இந்தியாவைவிட சீனாவுடன் கூடுதல் நெருக்கத்தைக் காட்டக்கூடும் என்பதுதான் பொதுவான புரிதல். 

இந்தியாவின் இலங்கை குறித்த கொள்கையை ஜனதா விமுக்தி பெரமுன நீண்ட காலமாக விமர்சித்து வருகிறது. ஒருவித ஆதிக்க மனோபாவத்துடனேயே இலங்கையை இந்தியா அணுகுவதாக குற்றம்சாட்டியும் வந்தது. சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற பேச்சுகள் இல்லை என்றாலும் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில், செப்டம்பர் 16ஆம் தேதியன்று ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் இந்தியா பற்றிய அவரது பேச்சு கவனிக்கத்தக்கதாக இருந்தது. 

தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இலங்கையில் அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டம் ரத்து செய்யப்படும் என்றார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டார். 

இவையெல்லாம் சேர்ந்து, அநுரவை இந்தியாவுக்கு சாதகமற்ற ஜனாதிபதி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.இந்த விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்தே ஜாக்கிரதையாக இருந்துவருகிறது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்துவந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா, "நாங்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை. 


புதிதாக தேர்வுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் பணியாற்ற நாங்கள் விருப்பத்துடன் இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார். தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் புதிய ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்ட அநுர குமார திஸாநாயக்கவை, நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் சந்தோஷ் ஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈழத் தமிழர்களின் தவிர்க்க முடியாத சுயநிர்ணயத்தை jvP எப்போதும் மறுத்தது.

ஒற்றையாட்சி அரசை ஒருங்கிணைத்து, கொழும்பில் அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அதன் நீண்டகால லட்சியத்தை நனவாக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு ஜே.வி...